வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினருடன், சென்னை பெருநகர காவலர்கள் அடங்கிய குழுவினர், சென்னை பெருநகரின் முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்படுவோர் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் 28.3.2021 மதியம், வாகனத் தணிக்கைகள் நடைபெறும் இடங்களில் ஒன்றான அமைந்தகரை, ஸ்கைவாக் சிக்னல் அருகில் நடைபெற்று வந்த தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கை பணியினை பார்வையிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், உரிய வழிகாட்டுதல்படி வாகன தணிக்கைகள் நடைபெறுகிறதா எ ன்றும் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, அண்ணாநகர் துணை கமிஷ்ணர் ஜவஹர், மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.



