நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
♻️தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர குற்றவிசாரணை நடைமுறைச் சட்டப்படி 1523 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் என 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த தீவிர நடவடிக்கையில் இன்று ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தாமோதரநகரைச் சேர்ந்த தங்கதுரை மகன் தங்க கார்த்திக் (25), அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா (20), மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் தர்மராஜ் (22), திருச்செந்தூர் ரோட்டைச் சேர்ந்த ரவி மகன் மாரிமுத்து (27), அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் முகேஷ் என்ற முனியசாமி (20), தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த அந்தோணிப்பிச்சை மகன் மரிய அந்தோணி ஆக்னல் (22), தட்டார்தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் லூக்காஸ் கிளின்டன் (22), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி சுனாமி காலணியைச் சேர்ந்த இருதயராஜ் பாண்டியன் மகன் அலெக்ஸ் அருள்மணி (42), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சாலமோன் மகன் பெரியசாமி (43), மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மகன ராஜேந்திரன் (42) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த பாண்டி மகன் ஆறுமுகப்பாண்டி என்ற துரை (36), கோவில்பட்டி சிந்;ததாமணி நகரைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (40), கோவில்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மாரித்துரை (33), கோவில்பட்டி புதுக்கிராமத்தைச் சேர்ந்த முத்தையாக மகன் கஜேந்திரன் (46), ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த முருகமணி மகன் செல்வம் (24), ஆறுமுகநேரி காமராஜர்புரத்தைச் சேர்ந்த திலகர் மகன் ஜான் என்ற ஜான்லிவியதாஸ் (24), விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணையடிப்பட்டி சாலமோன் நகரைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் ஜெபராஜ் (30), இது தவிர கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 5 பேர், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 பேர், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி எவ்வித அச்சமுமின்றி நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்குமாறு தூத்;துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

