பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மெய்யபுரம் சிந்துபூந்துறை மற்றும் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட
12 வாக்குச்சாவடிகளில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நெல்லை மாநகரத்தில் 73 பகுதியில் பதற்றம் நிறைந்த 180 வாக்குச்சாவடிகள் உள்ளன இந்த வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பு வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர் மேலும் ரோந்து பணியில் அதிகரிக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் நிலவரத்தை அவ்வப்போது போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார் பொதுமக்கள் எந்தவிதமான அச்சுறுத்தல் இல்லாமலும் பதற்றம் இல்லாமலும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் வாக்காளர்களுக்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நெல்லை மாநகரத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எந்தவிதமான பிரச்சனையின்றி நடந்துள்ளது அதுபோல் தற்போது எந்த பிரச்சனையும் இன்றி தேர்தல் நடத்துவதற்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது பாதுகாப்பு பணிகளில் உள்ளூர் போலீசாரும் எல்லைப் பாதுகாப்பு படையினரும் மற்றும் போலீசாரும் இணைந்து ஈடுபடுவார்கள் இவ்வாறு போலீஸ் கமிஷனர் அன்பு தெரிவித்தார் பேட்டியின்போது துணை கமிஷனர் சீனிவாசன் உதவி கமிஷனர்கள் நுண்ணறிவு பிரிவு ஆறுமுகம் டவுன் சதீஷ்குமார் இன்ஸ்பெக்டர் நுண்ணறிவு பிரிவு ரமேஷ் கண்ணன் சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களும் உடனிருந்தனர்
செய்தி தொகுப்பு
சிறப்புச் செய்தியாளர் நெல்லை கொம்பன் ராஜ்


