சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் அமமுகவில் தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான தேர்போகி V.பாண்டி முன்னிலையில் கழகத்தில இணைந்தார். இதில் தேவகோட்டை நகர கழக செயலாளர் கமலக்கண்ணன் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் இறகுசேரி முருகன், இறகுசேரி நா.குமார், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின் அருகில் இருந்த தேவகோட்டை வட்ட வ.உ.சி பேரவை சமுதாய அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மற்றும் சமுதாய மக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


