தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மும்பை மற்றும் அகமதாபாத் பட்டாலியனை சேர்ந்த 4 கம்பெனி மத்திய துணை பாதுகாப்பு படையினர் இன்று ஒரு தளவாய் நான்கு துணை தளவாய் தலைமையில் 357 பாதுகாப்பு படையினர் சிறப்பு இரயில் மூலம் சேலம் இரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள். இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பில் இரயில் நிலையத்தில் பொன்னாடை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மற்றுமொரு கம்பெனி சேலம் ரயில் நிலையத்திற்கு மாலை வர இருக்கிறது.

