தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 – ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரியலூர் தொகுதியில் தேர்தல் களத்தில் மற்றும் தேர்தல் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பின்பற்றவேண்டிய அறிவுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 28.03.2021 இன்று st.மேரிஸ் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை வகித்தார்கள், உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி பாஸ்கரன் பேசியதாவது
வாக்குச்சாவடியில் பணியாற்றும் காவலர்கள் சுத்தமான சீருடையில், அடையாள அட்டை, டார்ச்லைட், லத்தி வைத்திருக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் மாலை முதல் வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் எந்த கட்சி சின்னம் அடையாளம், சுவரொட்டி, கொடி முதலியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பொது வாக்குச்சாவடி ஆக இருந்தால் பெண்களுக்கென தனி வரிசை அமைத்திட வேண்டும். முதியவர்கள் ஊனமுற்றவர்கள் கைக்குழந்தை வைத்திருப்போர் கர்ப்பிணி ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.வாக்குச்சாவடி அருகே வாக்காளர்கள் கூட்டமாக நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர்கள் தவிர அனுமதி பெறாத எவரும் வாக்குச்சாவடிகள் அனுமதிக்கக்கூடாது. காவலர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறக்கூடாது, பணியில் இருக்கும் காவலர்கள் அரசியல் பிறரிடம் வீண் பேச்சுக்கள் பேசக்கூடாது, வேறு எவருக்கும் பணிந்து பாரபட்சத்துடன் செயலாற்ற கூடாது, கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடி காவலர்கள் முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வாக்குப் பெட்டி அருகில் சம்மந்தம் இல்லாத எவரையும் அனுமதிக்கக் கூடாது வாக்காளர்கள் அலுவலர்கள் காவலர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்



