பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வரும் திமுகவை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியையும், அவரது தாயாரையும், இழிவாக பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள திடலில் வைத்து மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினாபாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஞான புஷ்பம், துணைத் தலைவர் இந்திரா, துணைச் செயலாளர் முத்துமதி, பகுதி மகளிர் அணிச் செயலாளர்கள் ஷாலினி, ராஜேஸ்வரி, ஸ்மைலா, முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் மெஜிலா, சாந்தி, மகளிர்கள் அன்னத்தாய், ஜெசிந்தா, வசந்தா, பாத்திமா, சரோஜா, முல்லையம்மாள், பானு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

