இந்தியா முழுவதும் இரண்டாம் அலையாக கொரோன வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது,அதனையொட்டி தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கொரோனா பரவத் துவங்கியுள்ளது, தேவகோட்டை பகுதிகளில் மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது இதில் 5 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் சிகிச்சையில் உள்ளனர் .16 பேர் சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிய ராம்நகர் 4வது விதி மற்றும் கருதாஊரணி ஆகிய பகுதிகளில் இன்று தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் Dr. செல்வகுமார், Dr.ஷியாம் நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர், அந்த பகுதியை தடை செய்யப்பட்டபகுதியாக அறிவுறுத்தி தேவகோட்டை நகராட்சியினர் தடுப்பு அமைத்து பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் தடை செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெளியே வரக்கூடாது என்றும், பகுதியில் உள்ள பொதுமக்கள் முக கவசம் அணியுமாறு, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற வழிமுறைகளை பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


