“படித்து வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன்”. எனக்கு கை சின்னத்தில் ஆதரவு தாருங்கள் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் சாத்தான்குளம் பகுதியில் நேற்று 3ஆம் கட்டமாக வாக்கு சேகரித்தார். திறந்த காரில் நின்றவாறு நேற்று காலை சங்கரன் குடியிருப்பில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் ஆலங்கிணறு, வேலாயுதபுரம், ஞானியார்குடியிருப்பு, புதுக்குளம், சிம்பராபுரம், சிறப்பூர், விஜயராமபுரம், தோப்புவளம், முத்துகிருஷ்ணாபுரம், சுப்பராயபுரம், பன்னம்பாறை, வள்ளியம்மாள்புரம், புதுக்கிணறு, நெடுங்குளம், வேலன்புதுக்குளம், அமுதுண்ணாக்குடி, சொக்கலிங்கபுரம், விஜயனூர், பண்டாரபுரம் ஆகிய பகுதியில் கை சின்னத்துக்கு அதரவு கேட்டு வாக்கு சேகரிததார். செல்லும் இடங்கள் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனார்.
அப்போது அவர் பேசுகையில், நான் இந்த மண்ணின் சொந்தகாரன். 10 ஆண்டுகளாக இந்த பகுதி வஞ்சிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. கிராமங்களில் அடிப்படை வசதி இல்லை. மக்கள் கோரிக்கைகள் வைத்து இந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. தற்போது நடந்த ஆட்சி மத்திய அரசின் பொம்மை அரசாகவே இருந்து மக்களை வேதனையுள்ளாக்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் வகையில், தொலைநோக்கு திட்டங்களாக உள்ளது. அதனை கிராமங்களில் மக்கள் வரவேற்றுள்ளனர். ஆதலால் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகி நல்ல திட்டங்களை செயல்படுத்திட இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் என்னை கை சின்னத்தில் அமோக ஆதரவு வெற்றி பெற செய்யுங்கள். இந்த தொகுதியில் தொழிற்சாலை இல்லாமல் உள்ளது. 600 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வருவேன். படித்து வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்த தொகுதியில் ஆண்டுக்கு 25 பேர்கள் தேர்வு செய்து எனது கல்லூரியில் பொறியியல் பட்டம் படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்க செய்வேன். ஆதலால் எனக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
தொடர்ந்து அவர் பெரியதாழை, செட்டிவிளை பகுதியில் மீனவ மக்கள், பொதுமக்கள் சந்தித்து கை சின்னத்தில் ஆதரவு தருமாறு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனம், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், லூர்துமணி, பிச்சிவிளை சுதாகர், நகரத் தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் அழகேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் பிரிட்டோ, நயினார், நகர செயலாளர் இளங்கோ, முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பனர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர்கள் மாரியப்பன், சித்திரைசெல்வி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், கருங்குளம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் நல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், ஊராட்சி செயலாளர் மங்களாஸ்ரீதர், மாவட்ட விவசாய தொழிலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுகுமார், ஒன்றிய விசிக செயலாளர் ஜெயராமன், செந்தில்குமார், தொகுதி அமைப்பாளர் தமிழ்குட்டி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

