தூத்துக்குடி, நவ, 18
குரூஸ்பர்னாந்து 157 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள குரூஸ்பர்னாந்து சிலைக்கு பரதர் நல கூட்டமைப்பினர் மாலை தலைவர் சேசையா வில்லவராயர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் ஹெர்மன் கில்டு, எட்வின் பாண்டியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்
செயலாளர் புல்டன் ஜெசின், மாநகர காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர் ப்ரேனிலா புல்டன் ஜெசின், அன்னை பரதநல சங்கத்தைச் சேர்ந்த சேவியர் வாஸ், பாஸ்கர், காஸ்ட்ரோ, ராஜா, போஸ் ரீகன், பரவர் நல பேரவை தலைவர்கள்
டங்ஸ்டன், பிரேம் சந்திரன், அருள்வின், அஜீதா ஆக்னல், பெல்லா, நெய்தல் தொழில் அமைப்பின் தலைவர் பிரின்ஸ் கர்டோசா, பேராசிரியை பாத்திமா பாபு, நாட்டுப்படகு சங்க தலைவர் ராஜ், ஒருங்கிணைப்பாளர் ரீகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


