தூத்துக்குடி பாத்திமா நகரில் சுகாதார சீர்கேடு..! மெத்தனம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகள்.. மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, நவ,22

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46 வது வார்டு பகுதியான பாத்திமா நகர் பகுதியில் நீண்ட காலமாக தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பைக் கழிவுகள், முட்புதர்கள் மற்றும் நாத்து செடிகள் வளர்ந்து காடு போல் கிடப்பதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் பேசுவதோடு கொசு தொல்லை மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. குழந்தைகள், முதியோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது எனவே மேற்படி இடங்களை சுத்தப்படுத்தி சாக்கடை கழிவுநீர்கள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாத்திமாநகர் பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காமல் மெத்தன போக்கை கடைப்பிடிக்கிறது என அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் , கொசுத் தொல்லையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டியும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் பாத்திமாநகர் பகுதி மக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார சீர்கேடாக இருக்கும் பாத்திமாநகர்6வதுதெரு கிழக்குப் பகுதியில் தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி / பிரிவுத் தலைவர் சிமியோன்,மாநகர காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர் ப்ரேனிலா புல்டன் ஜெசின், ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாத்திமாநகர் மக்கள் தன்னெழுச்சியாக 100 க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள், பெருந்திரளாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வரும் பாத்திமா நகர் பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகள் பெற பல்வேறு போராட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். ஆகையால் இந்தப் போராட்டம் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் இது நேரில் தலையிட்டு பாத்திமா நகர் பகுதி மக்களின் வேதனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கைகள் வைத்தனர். இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் பாத்திமா நகர் பகுதி மக்கள் தன் எழுச்சியாக மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம், மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் பாத்திமா நகர் மக்கள் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையால் நாள்தோறும் படும் அவதிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாநகர் நல அலுவலர், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தால் இப்பகுதி மக்கள் படும் வேதனைகள் எவ்வளவு என்பதை தெரியவரும் ஆகையால் மேலும் கால தாமதம் படுத்தாமல் போர்க்கால அடிப்படை இப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றவும், முட்பதர்களை அகற்றுவோம் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மெத்தன போக்கு காட்டினால் விரைவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவோடு மாபெரும் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
