இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வரும் நிலையில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து விட்டுச் செல்லலாம்.
இந்நிலையில் கேமரா இல்லாத சாதாரண செல்போன்களை எடுத்துச் செல்லத் தடை இல்லை என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

திருத்தணி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட 52 கோயில்களில் கேமரா கொண்ட செல்போனை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பக்தர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கேமரா இல்லாத சாதாரண பட்டன் ஃபோன்களை கோயிலுக்குள் எடுத்து செல்ல எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பானது சாமானிய மக்களுக்கு ஏற்டும் இடையூறுகளைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி : தலைமைச்செயலக நிருபர் ரவிச்சந்திர பூபதி

