• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல் நகராட்சியில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் : நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது!

policeseithitv by policeseithitv
August 27, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல் நகராட்சியில் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் : நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொடைக்கானல், ஆகஸ்ட், 27

கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட
ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனால் நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது!
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல் கட்டமாக 24. 07.2026 அன்று நகராட்சி மாநகராட்சி அலுவலகங்கள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாம் கட்டமாக மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகங்கள் முன்பாக கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு மாநில மையத்தின் சார்பில் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தினால் ஒரு சில முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்றைய நாள் வரை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை கொடுமை செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது. காலிப் பணியிடங்கள் ஏராளமாக இருந்தாலும் பதவி உயர்வு என்பது கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்தது நம்முடைய போராட்ட அறிவிப்பின் காரணமாக பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டு வருகிறது ஆனாலும் நம்முடைய முழுமையான கோரிக்கைகள் நிறைவேறும் வரை நம்முடைய போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
நம்முடைய பிரதான கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம். அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10ல் விடுபட்ட பணியிடங்களை மீள பெறுவது, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரம் தாண்டி ஆய்வு கூட்டம் நடத்திடுவதை கைவிட, நகராட்சி மாநகாட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கட்ட பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 27.08.2026 அன்று இன்று நடைபெற்ற ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாக துறை ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்
கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்ற மேற்கண்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

* நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* அரசாணை எண்.152 மற்றும் அரசாணை எண்.10ன்படி அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர், கன்சர்வர்ன்சி இன்ஸ்பெண்டர், ஓட்டுநர் குடிநீர் பிரிவு அடிப்படை பணியிடங்கள் மற்றும் தூய்மை பணியாளர் பணியிடங்கள் வழங்கிட வேண்டும்.

* ஆய்வு கூட்டங்களை சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்.

* தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023ன்படி பணி விதிகளால் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லாத நிலை உள்ளது. பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு பதவி உயர்வு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கண்ட கோரிகள் நிறைவேற்ற காலதாமதகம் பட்சத்தில் வருகிற
10.09.2026 நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக
காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனவும் நகராட்சி ஊழியர்கள் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது : மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

Next Post

52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

Next Post
52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In