===========
தூத்துக்குடி, ஆகஸ்ட், 27
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும்
எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்,எம்.பி
அவர்களின் அறிவிப்பின்படி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் ராஜாஜி வாட்டர் டேங்க் எதிரே தனியாா் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மண்டல தலைவர்கள் நியமனம் மற்றும் பத்து பூத்திற்கும் ஒரு மண்டலத் தலைவர் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பஞ்சாரட்சம் அவர்களை தூத்துக்குடி மாவட்ட மேலிட பார்வையாளாக காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் பேசுகையில் காங்கிரசை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் வகையில் மாநில தலைமை உத்திரவிற்கிணங்க இயக்க மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத்கமிட்டி வரை அனைத்து மட்டத்திலும் கமிட்டிகள் அமைப்பதுடன் வாா்டு அளவிலும் கமிட்டிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டது.
வருகிற அனைத்து தேர்தல்களிலும் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் இமாலய வெற்றிகளை பெற வேண்டும் அதற்காக இந்த நிமிடத்தில் இருந்து இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நிர்வாகிகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் பேசினார்
இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், AICC உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட முன்னாள் தலைவர்கள், மண்டல மற்றும் வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து பிரிவுகள் / துறைகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருமைமிகு தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி இந்தக் கூட்டத்தை சிறப்பித்தனர். இந்தக் கூட்ட ஏற்பாட்டை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம் சகாயராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், ஊடகப்பிரிவு மண்டல தலைவர் ஜான் சாமுவேல், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்.சி துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவர் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் இசக்கியம்மாள், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், சிறுபான்மை துறை மைதீன், ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், வர்த்தக அணி அருள்வளன் ஊடகப்பிரிவு முத்து மணி, மாவட்ட துணை தலைவர்கள் டேவிட் வசந்தகுமார், ஜெபராஜ், நாகேந்திரன், தனபால்ராஜ், சுரேஷ், பிரபாகர், பொது செயலாளர்கள் புல்டன் ஜெசின், கோபால், மைக்கேல் பிரபாகர், ஆண்ட்ரூஸ், செயலாளர்கள் ஜோனத்தான் கதிர்வேல், மாரியப்பன், ராஜ்குமார், அசன்பாத், இளைஞர் அணி ரெனிஷ் பாபு, ஆலன், பொன்னரசி, பிராங்க்ளின் வார்டு தலைவர்கள் காமராஜ், ராஜரத்தினம், பொன்ராஜ், மகாலிங்கம், கிருஷ்ணன், சித்திரை பால்ராஜ், தனிஷ்லாஸ், கருப்பசாமி, முருகேசன், முனியசாமி, மைதீன் பிச்சை, ரதன், மாடக்கண், நிர்வாகிகள் அந்தோணிசாமி, சகாய புஷ்பராஜ், பர்ட் ராயல், சீனிவாச ஆச்சாரி, சுந்தர்ராஜ், ஜெயபாண்டியன், தனபாலன், பாலசுப்ரமணியன், கணேசன், தேவராஜ், சுரேஷ்குமார், அந்தோணிராஜ், ராபர்ட், எட்வர்ட்ராஜ், துரைப்பாண்டியன், பழனிராஜன், சின்னராஜா, எபனேசர், சிதம்பரம், ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றனர்..

