• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காங்கிரஸ் சார்பில் பாத்திமா நகரில் நடைபெற்ற மக்கள் போராட்டம் எதிரொலி மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகள் என்ன? காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின் நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
August 22, 2026
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காங்கிரஸ்  சார்பில் பாத்திமா நகரில் நடைபெற்ற மக்கள் போராட்டம் எதிரொலி மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகள் என்ன? காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி. ஆக.22,
தூத்துக்குடி மாநகராட்சி 46வது வார்டு பகுதியான பாத்திமா நகர் மற்றும் ஐhர்ஜ் ரோட்டில் வடிகால் இணைப்புகள் சரிவர அமைக்கப்படாதால் அருகில் உள்ள பல்வேறு வார்டுகளில் உள்ள கழிவுநீர் இந்த வடிகால் வழியாக செல்ல முடியாதால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க முன்வராதால் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மாவட்ட பொதுசெயலாளர் புல்டன் ஜெசின் ஏற்பாட்டில் மாநகர் மாவட்ட தலைவர் ளு.ஆ.சகாராஜ் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பாத்திமா நகர், ஜார்ஜ் ரோட்டில் உள்ள வடிகால் பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் வடிகால் இணைப்பு பணிகள் விரைவில் சீர்செய்யப்படும் எனவும், வடிகால் காண்களில் ஏற்பட்டுள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி வடிகால் இணைப்புகள் வழியாக கழிவு நீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதுபோல் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் 2 தினங்கள் வடிகால் அருகில் உள்ள தேங்கிய மணல் சுவடுகளை அகற்றியதாகவும், அதன்பிறகு பணிகள் நடைபெறவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தன் படி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின் ஆகியோர் மேற்கண்ட பகுதியில் என்னென்ன பணிகள் நடைபெற்றன என்பதை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: பாத்திமாநகர், ஜார்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ள வடிகால் காண்களில் 2 அடி ஆழத்திற்கு தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி, கழிவுநீர்கள் தடையின்றி செல்ல போர் கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காரணம், மாநகராட்சி 46 வார்டு பகுதிக்குட்பட்ட பாத்திமாநகர், ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள வடிகால் காண்களுக்கு அருகில் உள்ள பல்வேறு வார்டுகளில் உள்ள கழிவுகளும் செல்வதால், மேற்கண்ட இடங்களில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வடிகால் இணைப்பு பணிகள் துரிதமாக செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாத்திமாநகர் பகுதியில் அமைந்துள்ள நடைபயிற்சி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு பயன்படுத்த கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆகையால் இதனை உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமெனவும், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைப்பணிகளை தொய்வில்லாமல் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பாத்திமாநகர், ஜார்ஜ் ரோடு பகுதியில் முன்னின்று செய்து கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவதியுற்று வருவதால், இதற்கொரு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பாத்திமா நகர், ஜார்ஜ் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து வந்த வடிகால் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் காங்கிரஸார் எடுத்த போராட்ட முயற்சி, மாநகராட்சி நிர்வாகம் மூலம் விரைவில் தீர்வு கிடைத்தால் அது பாராட்டத்தக்கது.
Previous Post

Batalhas Brilhantes Avaliações que Transformam sua Experiência em Cassinos

Next Post

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது : மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

Next Post
தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது : மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது : மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் புல்டன் ஜெசின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In