• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!

policeseithitv by policeseithitv
May 21, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
42 வருடம் காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் முக்கிய பிரமுகர் என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, மே, 21

காங்கிரஸ் பேரியக்கத்தில் 42 வருடங்கள் தொடர்ச்சியாக பயணித்து மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர், மாநில காங்கிரஸ் செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த என்டிஎஸ் சாா்லஸ் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.கே.வாசனுடன் மிகவும் நெருக்கமாகவும் அவரது நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் அதன் பிறகு ஜி கே வாசன் தலைமையிலான தமாகாவில் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டு பரங்குன்றாபுரம் கூட்டுறவு வங்கி தலைவராக பணியாற்றினார், 1996 ஆம் ஆண்டு ஆலங்குளம் யூனியன் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தாலும் 1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் யூனியன் கவுன்சிலராக பொறுப்பு வகித்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தென்காசி தொகுதி வேட்பாளராக களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இவரது பெயரையே தலைமை முடிவு செய்துள்ளது அந்த நேரத்தில் கடைசி நிமிடத்தில் வேட்பாளர் மாற்றம் ஏற்பட்டது கடந்த 42 வருடங்களாக காங்கிரஸ் இயக்கத்தில் பயணித்து தென் மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளுக்கும் மிகவும் பரிச்சயமானவர் சுமார் 500 ஏக்கர் சொத்துக்களை விற்று அரசியல் பணிகளுக்காக செலவிட்டவர் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளர் பதவி இவர் வகித்த போது காங்கிரஸ் இயக்கம் தென் மாவட்டங்களில் வளர்வதற்கு மிகவும் பாடுபட்டவர். பிரபல பெருநிலக்கிழார், தொழிலதிபர், காங்கிரஸ் பேரியக்கத்தில் முக்கிய பிரபலமாக நீண்ட காலமாக பயணித்து வந்த சார்லஸ் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் சார்லஸ் அவர்களுக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் பொன்னாடை போற்றி வரவேற்றார்.


பின்னர் கட்சியில் நல்லமுறையில் பணியாற்றுமாறு வாழ்த்தினாா். அதனைத் தொடர்ந்து
அமைச்சா் செங்கோட்டையன், அமைச்சா் வெங்கட்ரமணன், உள்ளிட்ட அமைச்சா்களுக்கும் என்டிஎஸ் சாா்லஸ் சால்லை அணிவித்தாா். அவா்களும் வரவேற்று வாழ்த்தினாா்கள். பின்னா் தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்க்கும் சென்னையில் சால்வை அணிவித்தாா். அவரும் அவரை வரவேற்றாா். தூத்துக்குடியில் இவரது குடும்பத்தினர் பலரும் முக்கிய பிரமுகர்களாக இருந்து வருகிறார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக பணியாற்றியவர் என்பதால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள சார்லஸ் அவர்களுக்கு வருகிற உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது. 42 வருடங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தில் அங்கம் வைத்து வந்த சார்லஸ் திடீரென தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Previous Post

தூத்துக்குடி புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

Next Post

தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் மதன் ராஜாவுக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

Next Post
தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் மதன் ராஜாவுக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் மதன் ராஜாவுக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In