தூத்துக்குடி,மே,29
தமிழகக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் பெ. மதன்ராஜா நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்குத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் பெ. மதன்ராஜாவுக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மலர்க்கொத்து வழங்கி இன்முகத்தோடு வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார்.
மாநகராட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அமைச்சருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக வழங்கி வரவேற்றார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் மலர்க்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த எளிய வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.

