திமுக தலைவர் ஸ்டாலினையும் வேல் எடுக்க வைத்ததுதான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி( தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தடா பெரியசாமி என்பவரை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜேபி நட்டா திட்டக்குடி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக திட்டக்குடி தனியார் கல்லூரி வளாகத்தில்பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெ.பி நட்டா, “திமுகவிற்கு மக்கள் உதவி தேவைப்படுகிறது எனவேமக்களை தேடி வருகின்றனர்.திமுக என்றால் குடும்ப அரசியல்,ஊழல், கட்டப் பஞ்சாயத்துதான் நினைவிற்கு வரும். குடும்ப கட்சியாக திகழும் திமுகவும் காங்கிரஸ் இரண்டுமே நாட்டை கொள்ளையடித்து வருகிறது. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தினர். மாறன் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக செய்ததைத் தான் ஸ்டாலின் குடும்பம் மூன்று தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது. காங்கிரஸ் குடும்பம் நான்கு தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது.அதிமுக- பாஜக கூட்டணி என்பது வெற்றி கூட்டணி வளர்ச்சிக்கான கூட்டணி, நீங்கள் நிராகரிக்க வேண்டிய கட்சிகள் தான் திமுக – காங்கிரஸ். குடும்ப அரசியலை ஒழிக்கவேண்டும்.
வேல் யாத்திரை நடத்தி திமுக தலைவர் ஸ்டாலினையும் வேல் எடுக்க வைத்ததே பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாரதிய ஜனதா கட்சி பல திட்டங்களை செயல் படுத்தி உள்ளது.12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கபட்டுஉரியவர் களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டாஉறுதியளித்தார்.
இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக மேற்கு மாவட்டசெயலாளர் அருள்மொழிதேவன், பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் கே டி ராகவன், மற்றும் அதிமுக பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி நிர்வாகிகள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.

