தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க.,வை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை.உயிரை கொடுத்தாவது அதிமுகவை பெற்றி பெற செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் என்னை பறறியே ஸ்டாலின் சிந்தித்து கொண்டுள்ளார், பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிமுக. இந்த தேர்தலோடு திமுக எனும் குடும்ப கட்சிக்கு முடிவு விழா நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
முதல்வர் பதவி என்பது மக்கள் இடம் பணிகளை செய்து முடிப்பது தான். சட்டசபையிலேயே திமுகவினர் அராஜகம் செய்தவர்கள்ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

