ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்ணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட புல்லாவெளி, கோவங்காடு, அம்பேத்கர்நகர், சோலைபுதூர், பெத்தனாட்சி நகர், சிதம்பரம் நகர், மஞ்சள்நீர்காயல், பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் பழையகாயலில் பிரச்சாரம் செய்யும் போது, பழையகாயல் கடற்கரை பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும், கடற்கரை பகுதிக்கு செல்ல தார்ரோடு போட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பேசிய ஊர்வசி அமிர்தராஜ், நான் வெற்றி பெற்றதும் தூண்டில் பாலமும், தார் ரோடும் அமைத்து தருவேன் என உறுதி அளித்தார்.
இந்த பிரச்சாரத்தில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பண்டாரவிளை சுந்தரராஜன், பாலமுருகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், சாயர்புரம் நகர தி.மு.க செயலாளர் அறவாழி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், காங்கிரஸ் எடிசன், வட்டார தலைவர் சொரிமுத்து பிரதாபன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் பிச்சைமணி, முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங்ராஜ், காங்கிரஸ், தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


