மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார்.
உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். அடுத்த நாள் பிரசாரக் கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கலை எடுத்து வந்த பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் என்பவர் கோவில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


