தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-க்கான ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மேலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இன்று 25.03.2021 காலை 10 மணியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வாக்குசேகரித்தார். அதன்படி, புல்லாவெளி, கோவங்காடு வடக்கு, கோவங்காடு தெற்கு, அம்பேத்கார் நகர், சோலைபுதூர், பெத்தநாட்சிநகர், சிதம்பரநகர், மஞ்சள்நீர்காயல், பழையகாயல் மெயின்ரோடு, சர்வோதயாபுரி, ராமச்சசந்திராபுரம், ரட்சன்யபுரம், அம்புரோஸ்நகர் கடற்கரை பகுதி, பழையகாயல், அகரம் காலனி, அகரம், மாரமங்கலம், தீப்பாட்சி, தலைவாய்புரம், இடையர்காடு, காவல்காடு, சம்மடிகாலனி, சம்மடி போன்ற பகுதிகளில் வாக்களர்களை நேரடியாக சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
ஊர்வசி அமிர்தராஜ் வாக்குசேகரிக்க சென்ற கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பொதுமக்கள் பலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழகத்திலேயே முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இத்தொகுதியில் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும். கல்விக்கண் திறந்த காமராஜர் வழியில், ஏழை-எளிய மாணவர்கள் உயர் கல்வி கற்க வருடத்திற்கு 25 மாணவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பு படிக்க உதவிபுரிவோம். வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்; என்று பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேசினார்.
பிரசாரத்தின் போது, ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் வட்டார பொருளாளர் சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் சித்திரை, செய்துங்கநல்லூர் வட்டாரத் தலைவர் புங்கன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், முன்னாள் வட்டார தலைவர் சிங்கப்பன், எடிசன், சேதுராமலிங்கம், மாநில பேச்சாளர் ராஜவேல், நயினார்காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் நிலமுடையான், ராமச்சந்திரன் முத்துராமலிங்கம் சங்கர், பேட்மாநகரம் மகளிரணியினர் யாசர் அராபத், ரமீசான், ஜாரிஸா, ஷரின், பர்வின், ஆசியா, நகர மகளிர் அணியை சேர்ந்த ராஜாத்தி ராமலட்சுமி, ராகுல் பாத்திமா நர்கீஸ்பானு, சம்சுதீன்நர்கீஸ், இசக்கியம்மாள், பார்வதி, மற்றும் திமுக மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், நகர செயலாளர் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியசெயலாளர் கொம்பையா பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், மாவட்ட விவசாய அணி இசக்கியப்பன், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதி செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


