சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து நேற்று ஐந்துவிளக்குப் பகுதியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்,அப்போது திமுக கட்சி இல்லை கம்பெனி என்றும் விமர்சனம் செய்தார், அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. திமுக தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமை. இன்றைக்கு திமுகவில் உள்ளவா்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள், மத்தியில் பாஜக தலைமையிலான அரசு தமிழகத்திற்கு பல நக்க திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறது. காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருந்தால்தான் மாநிலம் வளா்ச்சி அடைய முடியும் என்றாா்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


