தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் திமுக வேட்பாளர்கள்?? திமுக தலைமைக்கு ஏமாற்றம் கொடுக்குமா?? தேர்தல் ரிசல்ட்
தூத்துக்குடி, ஏப்ரல், 4
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டியை தவிர மீதமுள்ள அனைத்து தொகுதியையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது. ஆனால் 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதற்கு நேர் மாறாக தூத்துக்குடி வடக்கு தெற்கு, ஆகிய இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் பாதி கூட கரை சேராது என்ற ஒரு பரபரப்பான தகவல் தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலை உருவாகியுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் பொதுமக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ சண்முகையாவுக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.அதற்குக் காரணம் எம்எல்ஏ சகோதரர்கள் மீது நில மோசடி ஈடுபட்டதாக வழக்கு மற்றும் பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக தொடர்ந்ததால் இந்த முறை அவருக்கு திமுக தலைமையால் சீட்டு மறுக்கப்பட்டது. அதே சமயத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளருக்கு சீட் ஒதுக்காமல் வெளியூர் வேட்பாளருக்கு திமுக தலைமை சீட்டு ஒதுக்கியதால் அன்றைய தேதியில் இருந்து பொதுமக்கள் மத்தியில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. வெளியூர் திமுக வேட்பாளர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்த நிலையில் திமுக தலைமை மௌனம் சாதித்ததால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் உள்ளூர் வேட்பாளருக்கு தான் தங்களது ஆதரவு என போர் கொடி தூக்கியதால் அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் சுந்தர்ராஜன் மிக குஷியில் காணப்படுகிறார் தொகுதியில் அவருக்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு வழங்குவதால் திமுக தரப்பினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர் அதே நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தரப்பினர் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக பரபரப்பு இல்லாமல் காணப்படுகிறது. திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். அதுபோல் திருச்செந்தூர் திமுக வேட்பாளரும் அமைச்சர்ருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தொகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேற்று அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது இப்பகுதியில் எந்தவித அடிப்படை பணிகளையும் செய்யவில்லை எனவும் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு பேர் சொல்லும் அளவிற்கு எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை எனவும் இதனை கண்டித்து உள்ளூர் கட்சிக்காரர்களிடம் பொதுமக்கள் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க துவங்கினர் திமுக வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சார வாகனத்தை பெண்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தை தொடராமல் பகுதியில் இருந்து திமுக வேட்பாளர் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக போட்டியிடும் சூழலில் இரண்டு தொகுதிகளும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் நாள்தோறும் கிளம்பி வருகிறது. திருச்செந்தூர் பாஜக வேட்பாளர் கே ஆர் எம் ராதாகிருஷ்ணன் பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுத்து செயல்பட தொடங்கி உள்ளதால் திருச்செந்தூர் தொகுதியும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரசுக்கு திமுக கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதால். சிட்டிங் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். கல்வி புரட்சியில் கலங்கண்டவர் பின்தங்கி இருந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியை கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவமனை, தாலுகா அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியவர். கமிஷன் கரப்ஷன், கலெக்ஷன், இல்லாமல் இத்தொகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வலுவாக உள்ளது என்று கூறலாம். ஏற்கனவே சாத்தான்குளம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி காங்கிரஸ் கோட்டை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் திமுக கூட்டணி கட்சியில் திருவைகுண்டம் மட்டுமே காங்கிரஸ் தரப்பினர் உற்சாகத்தில் காணப்படுகின்றனர் தூத்துக்குடி . தெற்கு மாவட்டத்தில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் வடக்கு மாவட்ட திமுகவில் கோவில்பட்டி தொகுதி கடந்த முறை எந்த ஒரு நபருக்காக அவர் மீது உள்ள அதிருப்த்தியால் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு எளிதாக வெற்றி பெறுவதற்கும் அதே சமயத்தில் அவரை எதிர்த்து நின்ற டிடிவி தினகரன் தோல்வி அடைவதற்கு காரணம் அவருடன் பணியாற்றி கோவில்பட்டி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு பெற்றிருந்த ஒருவரால் கடம்பூர் ராஜ் வெற்றி பெற்றார் டிடிவி தினகரன் தோற்கடிக்கப்பட்டார். அதே நபர் தற்போது கட்சி மாறி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதால் 2021 ஆண்டு கொடுத்த அதே ரிசல்ட் கோவில்பட்டி மக்கள் கொடுக்க முன் வந்துள்ளதாக பேசப்படுகிறது. அப்படியென்றால் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும் திமுகவிற்கு சற்று நெருக்கடி என்ற சூழல் உருவாகியுள்ளது மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்ட சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் எத்தனை கரை சேரும் என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது இவை அனைத்திற்கும் இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமையான தீர்வு கிடைத்துவிடும் மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டம் திமுக தலைமைக்கு ஏமாற்றமே!!!



