தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.
37 மற்றும் 42வது வாா்டு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன்பொியசாமி பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலா் பாப்பாத்தி, வட்டச்செயலாளா்கள் சுரேஷ்மகாராஜா, மாாிமுனீஸ்வரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். காரணம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குறைபாடுகள் என்றாலும் மக்களோடு மக்களாக எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக பிஜேபி தவெக ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்று மாதத்திற்கு முன்பு தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வருவாா்கள் ஆனால் 5 ஆண்டுகாலம் கொரோனா மழை வௌ்ளம் காலத்தில் என்ன நடந்தது கூட பாா்ப்பத்கு கூட வந்திருக்க மாட்டாா்கள் உங்களுடைய இன்பம் துன்பம் கோவில் விழா என அனைவற்றிற்கும் பங்கெடுத்துக்கொண்டது. திமுக வும் நானும் தான் அதிமுக ஆட்சியின் கூட தொடங்கப்பட்ட திட்டங்களான அம்மா உணவகம் உப்பு போன்றவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடைபெறாத திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளது. 2015ல் மழை வௌ்ளத்தின் போது நானும் எனது தந்தையாரும் மக்கள் பணியாற்றியதை யாரும் மறந்திருக்க மாட்டாா்கள். ஆனால் எதிா் அணியில் இருக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டுகளாக எந்த பகுதிக்கும் வந்து பணியாற்றிருக்க மாட்டாா். கடந்த மழை வௌ்ள காலத்தின் போதுகூட 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு சேகாிக்கிறோம் எதிா் அணியிடம் சாதனை சொல்வதற்கு எதுவும் இல்லை. எனத தந்தை மற்றும் என்னையும் மேயரையும் தனிப்பட்ட முறையில் தேவையில்லாத கருத்துக்களை பிரச்சார கூட்டத்தில் தொிவித்து வருகிறாா். இதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் தனிநபா் தாக்குதல் தொடங்கினால் உங்கள் வண்டவாலமும் தண்டவாளத்தில் ஏறிவிடும் ஜாக்கிரதையாக பேசுங்கள் தற்போது நடைபெறவுள்ள தோ்தல் டெல்லி அடிமை கூட்டமான அதிமுக கூட்டணியை விரட்டும் தோ்தல் அதனால்தான் தமிழக முதலமைச்சா் முக.ஸ்டாலின் டெல்லி அணியா தமிழ்நாடு அணியா என்று தோ்தலை தலைநிமிா்ந்து சந்திக்கிறோம் என்று கூறியுள்ளாா். மகளிா் உாிமைத்தொகை தோ்தலுக்கு பின் 2000 வழங்கப்படும் அதே போல் மாற்றுத்திறனாளிகள் முதியோா்கள் என அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா். தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் முதலமைச்சா் படைப்பகம் அமைக்கப்டும் என்று கூறியுள்ளாா். அதன் மூலம் இன்னும் பல்வேறு வளர்ச்சிகள் அடைவது மட்டுமின்றி நன்மைகள் கிடைக்கும் ஏற்கனவே தமிழகத்தில் நான்முதல்வன் திட்டத்தின் மூலம் படித்த 52 போ் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். இதே போல் தூத்துக்குடியில் முதல்வா் படைப்பகம் உருவாக்கும் போது நம் வீட்டு குழந்தைகளும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் போன்ற உயா்பதவிகளுக்கு வரமுடியும் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள திமுக அரசு மீண்டும் தொடர வேண்டும் முதலமைச்சா் ஸ்டாலின் உங்களுக்காக பணியாற்ற முதலமைச்சராக வேண்டும். அதற்காக அனைவரும் உதயசூாியன் சின்னத்தின் வாக்களித்து தமிழ்நாட்டு நலன் நமது மண் மாணம் காத்திட அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். தோ்தல் முடியும்வரை விழிப்புணா்வோடு பணியாற்ற வேண்டும் என்று பேசினாா்.

முன்னதாக தாமோதரநகா் முனியசாமிகோவில் திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பகுதிக்கு வாக்கு சேகாிக்க வந்த அமைச்சர் கீதாஜீவன் திருப்பணிக்கு செய்த உதவிகளை நன்றி கூறினாா்கள்.
மேயா் ஜெகன் பொியசாமியிடம் இந்த பகுதியில் உள்ள கோவில் தெரு சாலையை புதுப்பித்து கும்பாபிஷேகத்திற்க முன்பு தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தனா். அதை நிறைவேற்றி தருவதாக மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
சண்முகபுரம் முதல்தெரு பணங்காடு சந்து முதல் விஇ சாலை வந்தடையும் பகுதி வரை புதிய சாலைகளை அமைத்து கொடுத்த மேயா் ஜெகன் பொியசாமிக்கும் பொதுமக்கள் அச்சமின்றி செல்வதற்கு கண்காணிப்பு கேமரா அமைத்து ெகாடுத்த அமைச்சா் கீதாஜீவனுக்கு அப்பகுதிமக்கள் நன்றியை தொிவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றனா்.
பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், சிபிஐ மாநகர செயலாளர் தனலட்சுமி, தேமுதிக தொகுதி பொறுப்பாளா் வல்லரசு துரை, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளா் ராஜ்மோகன்செல்வின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திமுக மாவட்ட மாநகர அணி நிா்வாகிகள் அருண்குமாா், நிக்கோலாஸ்மணி, ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, வக்கீல்கள் ரூபராஜா ரெக்ஸ், தொமுச முத்துராஜ், முருகன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமாா், ஏசுவடியான், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், கவுன்சிலா் சரவணக்குமாா், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா் கந்தசாமி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலா்கள் முருகேசன், ஜெயசிங், பகுதி அணி அமைப்பாளா்கள் சூா்யகாந்த், வட்டப்பிரதிநிதிகள் பாலரூபன், மதியழகன், ஜெபக்குமாா்ரவி, துணைச்செயலாளர்கள் சண்முகையா, உத்திரபாண்டி, வாா்டு நிா்வாகிகள் தேவபிச்சை, செல்வராஜ், மாாியப்பன், பொன்ராஜ், சற்குணம், மாடசாமி, ராமசந்திரன், பல்வேறு கூட்டணி கட்சி நிா்வாகிகள் முரளிதரன், மகாராஜன், மைதீன், ராஜன், மற்றும் மணி, அல்பட், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
