கொடைக்கானலில் பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் : 20 தினங்கள் இரவு பகல் பாராமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கோடை வி.ஆனந்த் எழுச்சி உரை
கொடைக்கானல், ஏப்ரல், 3


தேசிய ஜனநாயக கூட்டணி பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கட்சியின் மாநிலச் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான கோடை வி ஆனந்த் பங்கேற்றார். வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களை கோடை ஆனந்த் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மற்றும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் செயல்பாடுகள் குறித்து அறிமுக கூட்டத்தில் கோடை ஆனந்த் சிறப்புரையாற்றினார் . பழனி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 50,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இன்னும் 15 தினங்கள் உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வைக்கும் அனைத்து கட்சியினரும் கண் தூங்காமல் 15 தினங்கள் கடுமையாக உழைத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தர வேண்டும் எனவும் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொடைக்கானலில் மிகப்பெரிய வாக்கு வங்கி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனுக்கு பெற்று தர தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என இந்த தருணத்தில் தெரிவித்து கொள்வதாக கட்சியின் மாநிலச் செயலாளர் கோடை ஆனந்த் பேசினார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் தமிழ் தேசிய வரம் பிளாக் கட்சி சார்பில் பொன்னாடை போற்றி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்
