தூத்துக்குடி,
ஏப்.3-
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கீழ ரங்கநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வடக்கு ரதவீதி, செல்வீசர் தெரு. 2ம் கேட் ஜோசப் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பிலும்,
ஆங்காங்கே நடந்து சென்றும் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்திற்கு
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலா ளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர்கள் சக்திவேல், கருப்பசாமி. கவுன்சிலர் ராமுஅம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா மழை வெள்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன். தூத்துக்குடி கீழ ரங்கநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வடக்கு ரதவீதி, செல்வீசர் தெரு, 2ம் கேட், ஜோசப் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரித்தார்.
கடந்த காலங்களில் சிறிய மழை பெய்தாலும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும். இப்போது அந்த நிலைஇல்லாத அளவிற்கு கட்டமைப்புகளை உரு வாக்கியுள்ளோம். நான்கு வார்டுகளில் மட்டும் தான் மழை நீர் தேங்கும் அளவு இருக்கிறது. அது வும் தோதலுக்கு பிறகு முழுமையான பணிகளை நிறைவேற்றிவிடுவோம். திமுக தோதல் அறிக்கை யில் கூறியபடி இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன் வழங்கப்படும். அரசு காப்பீட்டு திட்டம், மருத்துவ முகாம் என்று பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் பயன் பெற்றுள்ள னர்.திமுக ஆட்சி அமைந்த பின் தமிழகத்தில் நான்கா யிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. 2ம் கேட் பகுதியில் இருந்த விநாயகர் கோவில் இரயில்வே நிலையம் விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் நிலை வந்தது. மாற்று இடமாக கதி ரேசன் கோவில் தெரு பகுதியில் புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு இன்று பக்தர்கள் நல்லமுறையில் பயனனடைந்து வருகின்றனர் என்று பேசினார்.
முன்னதாக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வஉசி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங் கினார். பிரச்சாரத்தில் பூரண கும்ப மரியாதை யும் மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக பெண்கள் வரவேற்றனர். பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாவட்டதலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செய வாளர் ஜவஹர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், சிபிஐ மாநகர செயலாளர் தனலட்சுமி, சிபிஎம் மாநகர செய லாளர் முத்து, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசுvதுரை, எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளர் காதர் உசேன், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளா ராஜ்மோகன் செல்வின், துணை மேயா ஜெனிட்டா. முன்னாள் மாவட்ட காங்கிரஸ்தலை வர் முரளிதரன், திமுக மாவட்ட மாநகர அணி நிர்வாகிகள் அந்தோணிஸ் டாலின், கணேஷ்குமார், அருண்குமார். நிக்கோ லாஸ்மணி, சோமநாதன். ஜீவன்ஜேக்கப் வக்கீல்கள் குபேர் இளம்பரிதி, ரூப ராஜா ரெக்ஸ், சுபேந்தி ரன், கிறிஸ்டோபர் விஜய ராஜ். நாகராஜன்பாபு,
முத்துராஜ், மரியதாஸ், வினோத், முருகன், சந்தன மாரி, இந்திர இந்திரா, பெல்லா, முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவாணி, வைதேகி,
சரவணக்குமார். ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார் கந்தசாமி. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகாராஜன், மந்திரமூர்த்தி, முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தொழில திபர்கள் தெய்வநாயகம், செந்தில் ஆறுமுகம், சிவா மாரியப்பன். வட்டச் செயலாளர்கள் சேகர், கருப்பசாமி, டென்சிங். மனோ, சுரேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி. ராதாகிருஷ்ணன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யகாந்த், மார்க்சிஸ்ட் ராபர்ட், ராஜா, வார்டு நிர்வாகிகள் மாரிமுத்து. முத்துக்குமார், பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகி கள் ரசல், நக்கீரன், மகா ராஜன், மைதீன், ராஜன். மற்றும் மணி அல்பட், உள் படபலர் கலந்து கொண்ட னர்.
