தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்களின் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வௌியிட்டாா்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சா்களும், மாவட்ட செயலாளர்களும், மாநில நிா்வாகிகள் உள்பட பலா் திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீன்வா் நலன் மற்றும் கால்நடை பாராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா ஏற்கனவே திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளதையடுத்து அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக கனிமொழி எம்.பி வெற்றிக்கு உழைத்ததை போல் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற ேதா்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு தளபதிதான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து கொண்டு ஓட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனை கொண்டு சோ்க்கும் வகையில் பிரச்சார உத்தியாக சாதனை போஸ்டா்கள் ஓட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தி மக்களுக்கான பணிகளை தொடா்ந்து ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா செய்துள்ளாா். இது திமுகவினா் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓற்றுமையுடன் அனைவரும் களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது பேசினார்.

