தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருவைகுளம் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக திட்டம்.!கமிஷன், கரப்ஷன் இல்லாமல் பணிகள் குறித்த காலகட்டத்திற்குள் துரிதமாக நடக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு அதிமுக பிரமுகர் புல்டன் ஜெசின் கோரிக்கை!!
தூத்துக்குடி, மார்ச், 8


தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தருவைகுளம் மீன்பிடி துறைமுகம் கட்டும்பணி தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக விரிவாக்க திட்டம்.கமிஷன், கரப்ஷன் இல்லாமல் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை துரிதமாக செய்து முடிக்க உயர் மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பிரமுகர் புல்டன் ஜெசின் கோரிக்கை வைத்துள்ளார். அரசுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் வில் தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவை குளத்தில் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி, தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக விரிவாக்கத் திட்டம் போன்ற பணிகளுக்கு கடந்த 04/03/26 அன்று தமிழக முதல்வர் மூலம் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.தூத்துக்குடி மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேற்படி திட்டங்கள் காலதாமதம் ஏற்பட்டு 5 ஆண்டுகள் இந்த அரசு நிறைவு பெரும் தருவாயில் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.இது காலதாமதமான அறிவிப்பு என்றாலும் கூட மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பதால் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் ₹143.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுகப் பணியின் ஒப்பந்தங்களை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அந்நிறுவனத்தை மக்கள் பிரதிநிதி ஒருவர் மேற்கண்ட பணிக்கு 10 %சதவீதம் ₹15 கோடி தர வேண்டும் என்றும், அதன் பிறகு பணிகள் துவக்க முடியும் என கூறுவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன ஆகையால் .தருவைகுளம் பகுதியில் அமைய உள்ள தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி துறைமுக பணிகளுக்கான ஒப்பந்த பணிகள் இதுபோன்று கமிஷன், கரப்ஷன், போன்ற நெருக்கடி களுக்காக மேற்கண்ட பணிகள் தரமற்றதாகவும் குறித்த நேரத்தில் நடத்த முடியாமலும் சூழ்நிலைகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் 150 கோடியில் துவங்க உள்ள அனைத்து பணிகளையும் தரமாகவும் குறித்த காலகட்டத்தில் அதை செய்து முடிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் கமிஷன் கரப்ஷன் காக மேற்கண்ட பணிகள் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டால் தூத்துக்குடி தருவைகுளம் கிராம மீனவ மக்களின் வளர்ச்சிக்கும் பின்னடைவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர.ஆகையால் மேற்படி ஒப்பந்தக்காரர்களுக்கு மக்கள் பிரதிநிதி என்ற பெயரில் யாரேனும் கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்களா என்பதை உடனடியாக விசாரணை செய்து இதில் தவறு ஏதும் ஏற்பட்டிருந்தால் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.கமிஷன், கரப்ஷன் இல்லாமல் பணிகள் துரிதமாக நடக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என அதிமுக முக்கிய பிரமுகரும் தலைவர் மாநகர கிழக்குப் பகுதி மாநகர பகுதி செயலாளர் எம் ஜி ஆர் இளைஞர் அணி வட்டக் கழக செயலாளர் 46 வது வார்டு பாத்திமா நகர் புல்டன் ஜெசின் அரசுக்கு கோரிக்கையை முன் வைத்துள்ளார். கடந்த வாரம் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட தருவைகுளம் மீன் பிடி துறைமுகம் கட்டும் பணி, தூண்டில் பாலம் கமிஷன், கரப்ஷன் ஆகிய ஆகியவற்றிற்காகவும் மக்கள் பிரதிநிதி என்ற பெயரில் பணிகள் செய்யவிடாமல் தடுக்க முற்ப்படும் நபர்கள் யார் என அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதே சமயத்தில் மேற்கண்ட பணிகளை தரமாகவும் குறித்த காலகட்டத்தில் பணிகளை முடித்துக் கொடுக்க தமிழக அரசு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என அதிமுக பிரமுகர் அரசுக்கு கோரிக்கை முன் வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
