தூத்துக்குடி, பிப், 4
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலா் காயத்ாி வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி 250 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு 10 வகையான சீா்வாிசை பொருட்களை வழங்கி பேசுகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்றையதினம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தி வைக்கப்பட்டுள்ளது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் அனைவருக்கும் ஓரு மகிழ்ச்சி ஏற்படும் நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த காலக்கட்டத்தில் குழந்தையும் வளர்ச்சியடையும் நேரத்தில் இதுபோன்ற வளையல் அணியும் போது அதன் ஓசைகளும் அதே போல் கொலுசு ஓசைகளும் கேட்கும் போது குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்முடைய முன்னோா்கள் கூறியுள்ளனா். இந்த காலக்கட்டத்தில் உயரிய நோக்கில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தாய்மை என்பது புனிதமானது மற்றும் அற்புதமானது. குழந்தையை பெற்று வளர்ப்பதில் முழுமையான பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. நீங்கள் நங்கூரமாக இருந்து பாதுகாத்து கொள்ள கடமைப்பட்டவா்கள் அதை நம்மால் தவிர்க்க முடியாது. பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்லதொரு பிள்ளையை பெண்களால் தான் உருவாக்க முடியும் என்பதை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நீங்கள் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பத்து மாதம் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறீர்கள். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு சில உணவு வகைகள் பிடிக்காமல் போகும். ஆனால் கர்ப்பக் காலங்களில் சாப்பிடமால் இருக்க கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தையும் நல்ல ஊட்டச்சத்தோடு பிறக்கும். அந்த காலக்கட்டத்தில் உங்களது எடை 10 கிலோ அதிகாித்தால் தான் குறைந்தது 3 முதல் 3½ கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்து அக்குழந்தைகளை முழுமையான உடல் தகுதியுடன் நன்றாக வளர்க்க முடியும். குறிப்பாக கர்ப்பக்காலங்களில் முட்டை, பால், பழங்கள், பாசிப்பயிறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் சத்தான உணவு வகைகளை நாம் சாப்பிடும் போது நாமும் ஆரோக்கியமாக இருப்போம் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பேறுகாலத்தின் போது எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மேலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தாய்ப்பால் நன்றாக கொடுக்கும் போது தான் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் அதன் பின் இணை உணவுகளான கீரை, பருப்பு, கஞ்சி, பழங்கள் உள்ளிட்ட எளிய உணவுகளை கொடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் இளம் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் மாற்றுத்திறன் அறிகுறிகள் தென்படும் குழந்தைகளுக்கு தொடக்க நிலையிலேயே அதாவது இரண்டு வயதிற்குள் கண்டுபிடிக்கும் பொழுது அதனை நம்மால் சரிசெய்ய முடியும். இப்போது உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் ஓய்வு வேண்டும். அதேபோன்று குழந்தை பிறந்த பிறகும் உங்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்ப பணிகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவினை தினமும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் அருகாமையிலுள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்து, உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் கருவூற்ற நாளிலிருந்து 1000 நாட்கள் முக்கியமான நாட்களாகும் குழந்தை பிறந்ததிலிருந்து ஓவ்வொரு கட்டத்தையும்கடந்து செல்லும் போது மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும் 2வயதை கடந்து விட்டால் கொஞ்சம் பாரம் குறைந்துவிடும். அந்த காலக்கட்டத்தில் நம்முடைய பணி முக்கியமானது. என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, அவர்களுக்கு 5 வகையான உணவுகளை பரிமாறி மகிழ்ந்தார்.
விழாவில் தேசிய ஊட்டச்சத்து இணை இயக்குநா் அன்பு, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, ஊரக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், கவுன்சிலா் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, பெருமாள் கோவில்அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலா் ரூபி பொ்னான்டோ, நன்றியுரையாற்றினா்.

பாக்ஸ்: அமைச்சா் கீதாஜீவனின் மனித நேயமும் கா்ப்பிணியின் பாராட்டும்
சமுதாய வளைகாப்பு விழாவில் கடந்த ஆண்டு கா்ப்பிணியாக கலந்து கொண்ட பெண்மணிகள் ஜெயமாருதி அருணா இருவரும் பேசுகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வின் போது அமைச்சர் கீதாஜீவன் எங்களுக்கு தாயாக இருந்து பல்வேறு சீர் வாிசை பொருட்களை வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறினாா்கள். அதன்படி நடந்து கொண்டதால் இன்று நாங்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளோம் இதற்கு அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று பேசினாா்கள் 250 கா்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் 5 வகையான உணவு வகைகளுக்கும் அமைச்சர் கீதாஜீவன் பொறுப்பேற்று முழுமையாக அவா் வழங்கினாா்.

