• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””

policeseithitv by policeseithitv
February 4, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
40 வருடமாக போடப்படாத சாலைகள் தற்போது போடப்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயார் : குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!””
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, பிப், 4

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையா் சரவணக்குமாா், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான்றிதழ் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை கட்டிட அனுமதி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த பகுதிக்குட்பட்ட மண்டலக் கூட்டத்தில் இங்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது மாநகராட்சி ஆன்லைனில் புகாா்கள் தொிவித்தாலும் அது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உங்கள் இல்லத்திற்கே வந்து அதை சாி செய்து விடுவாா்கள். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. மாநகராட்சி பொருத்தவரை சுகாதாரம் உள்ளிட்ட நிறைய பணிகள் நடைபெற்று வருகிறது 4000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது 45 வருடமாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது வீட்டை தாண்டிய பின்பு ஒரே பனைமரமாக இருக்கும் ஆனால் தற்போது எட்டையாபுரம் ரோடு தாண்டி குடியிருப்பு பகுதிகள் வந்து கொண்டுள்ளது அதற்கு தகுந்தாப்போல் சில வசதிகள் செய்யப்பட உள்ளது பெரிய சாலைகள் அமைக்கப்படுகிறது ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 60 அடி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது ஜோதி நகர் முக்கில் இருந்து ஊருக்குள் செல்லும் வகையில் தனியார் பள்ளி உள்ளது அதுவரை சாலைகள் தற்போது அமைக்கப்பட உள்ளது ஏபிசி கல்லூரி அருகில் ஒரு சாலை அமைக்கப்பட உள்ளது தற்போது அந்த சாலை ஐந்து புள்ளி ஐந்து அடியாகத்தான் உள்ளது விரிவாக்கம் செய்யப்பட்டு 12 மீட்டராக சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் கல்லூாி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும். தற்போது அமைக்கப்பட உள்ள சாலைகள் இணைப்பு சாலைகள் எல்லாம் முடிந்த பின்பு ஸ்டேட் பேங்க் காலனி வழியாக 60 அடி சாலையில் கடற்கரை வரை சென்று விடலாம் ரயில்வே கேட் இடதுபுறம் 3 சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட உள்ளது. 40 வருடமாக போடப்படாத சாலைகள் எல்லாம் தற்போது போடப்பட்டு வருகிறது அதன் ரயில்வே பாலம் ஒன்று உள்ளது அதற்கு கீழே கார்கள் செல்லும் வகையில் வண்டி பாதை என்று இருந்தது தற்போது அதை ஆக்கிரமிப்பு முள் செடிகள் எல்லாம் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது அந்தப் பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து முற்றிலும் குறைந்து விடும். வின்பாஸ்ட் சந்திப்பில் இருந்து சங்கரபோி லிங் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தபகுதிக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தாற் போல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலத்தில் உள்ள பிங் பாா்க் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞா்களின் கோாிக்கையை ஏற்று ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க மாநகராட்சி சொந்தமான இடங்களில் உடற்பயிற்சி கூடத்தில் சிறிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இரண்டு அடி மூன்று அடி நான்கு அடி சாலைகள் எல்லாம் முழுவதும் போடப்பட்டுள்ளது வரும் காலத்தில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் 2022ம் ஆண்டு கடற்கரை சாலையில் ஸ்கேட்டிங் அமைக்கப்பட்டது அதே போல் ரஹமத் நகரில் புதியதாக ஸ்கேட்டிங் விளையாட்டு அமைக்கப்பட உள்ளது பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகரில் நாம் பயன்படுத்தக் கூடாது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் தற்போது ஆரம்பித்தால் ஒரு வருடத்திற்குள் மாநகரில் கேரிப்பையை ஒழித்து விடலாம் தூத்துக்குடி மாநகரில் முற்றிலும் கேரி பை ஒழித்து விடலாம். 10 செமீ மழை இனி வரும் காலங்களில் பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் முற்றிலும் தண்ணீர் வழிந்தோடி விடும் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை முன்உதாரணமாக கட்டமைப்பில் சிறந்த மாநகராட்சியாக வளர்ந்து வருகிறது. பொதுமக்கள் செய்ய வேண்டியதெல்லாம் குப்பைகளை தரம் பிாித்து கொடுக்க வேண்டும். என்று பேசினாா்.
கூட்டத்தில் உதவி ஆணையா் பொறுப்பு முனீர்அகமது, நகரமைப்புதிட்ட உதவி செயற்பொறியளர் ராஜேஷ்கண்ணா, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், கண்ணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் காந்திமதி, சுப்புலட்சுமி, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜெயசீலி, பவாணி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், கற்பகக்கனி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊா்வலமா க வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

Next Post

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

Next Post
தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

தூத்துக்குடியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கினார்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In