தூத்துக்குடி அதிமுக முக்கிய பிரமுகர் பாத்திமாநகர் ஜோசப்மணி இல்ல திருமண விழா : பி.ஜே. புல்டன் ஜெசின் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்கள்.
தூத்துக்குடி, பிப், 1


தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி (EPS), அவர்களை சேலத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் வைத்து நேற்று மாலை தூத்துக்குடி அதிமுக முக்கிய பிரமுகர் பி.ஜே. புல்டன் ஜெசின் தலைமையில் பாத்திமா நகர் ஜோசப்மணி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது இல்ல திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதி தலைவரும், தூத்துக்குடி மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர், 46 வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் பிஜே புல்டன் ஜெசின், உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம் பி சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதன்படி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்களை தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் நேரில் சந்தித்து பாத்திமா நகர் ஜோசப்மணி இல்ல திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்கள். இந்த சந்திப்பின்போது அதிமுக முக்கிய பிரமுகர் புல்டன் ஜெசின், நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தூத்துக்குடியில் வருகிற 06/02/26 அன்று பனிமய அன்னை திருத்தலத்தில் வைத்து நடைபெறும் திருமண வார்த்தை பாட்டிற்கும் அதன்பின் தூத்துக்குடி பீச் ரோடு ஸ்னோ ஹாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி முன்னேற்பு ஏற்பாடுகள் தூத்துக்குடியில் வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோசப் மணி, மெஸ்மா தம்பதியினர் மற்றும் ஜோசப் ஜினோசன், லிட்வின் ஸ்னோஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். அதிமுக முக்கிய பிரமுகர் பாத்திமா நகர் ஜோசப்மணி இல்ல திருமண விழாவில் பிரபல தொழிலதிபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் பல்வேறு அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

