தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் லட்சியமான 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் இளைஞர் அணியினா் 65 நாட்கள் கண் தூங்காமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் : இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா பேசினாா்.
ஓட்டப்பிடாரம்,பிப்,1
திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் மாநாட்டை வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி விருதுநகரில் பிரம்மாண்டமாக நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட – துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாடு விருதுநகர், ‘கலைஞர் திடலில் மிக எழுச்சியுடன் நடைபெற உள்ளது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் துணை அமைப்பாளா்கள் அப்பணியை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய திமுக சாா்பில் புதியம்புத்தூாில் உள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளா் அப்துல்மாலிக், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளா் வக்கீல் பால்துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குணசேகா், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அணிடன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான அ.இளையராஜா பேசுகையில் நம்முடைய எம்.பி கனிமொழி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெற்கு மாவட்டத்தில் ஆற்றிய பணிகள் செய்த சாதனைகள் எல்லாவற்றையும் நீங்கள் அறிவீா்கள் தளபதியாா் இளைஞர் அணி பயணத்தில் தொடங்கி பல்வேறு சோதனைகளை சந்தித்து இன்று முதலமைச்சாரக சாதனையாளராக மக்கள் மத்தியில் திகழ்கிறாா். நமக்கு 2026ல் வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியுள்ளாா் அதற்கேற்றாற் போல் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியத்தில் உள்ள இளைஞர் அணியினா் இன்னும் 65 நாட்கள் கண் தூங்காமல் கழக பணியாற்றி இல்லந்தோறும் திமுக ஆட்சியின் சாதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும் விருதுநகாில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டிற்கு எழுச்சியுடன் சென்று பங்கெடுத்து வரலாற்று சாதனையை உருவாக்குவோம் எந்தவித எதிா்பாா்ப்பு இன்றி முழு மனதோடு உழைக்கும் இளைஞா் அணியினருக்கு பதவிகள் தேடி வரும் என்றும் தென் தமிழகமே குலுங்க போகும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து நமது இளைஞரணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று சொல்லத்தக்க வகையில் அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த எழுச்சி மாநாட்டில் பங்கேற்போம். என்று பேசினார். தென்மண்டல இளைஞர் அணி மாநாட்டிற்கு எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இளைஞர் அணியினர்களை வெண்சீருடை அணிந்து மெகா எழுச்சியோடு மாநாட்டில் பங்கேற்க மாஸ் திட்டம் செய்து இளைஞர்களை தயார்படுத்தி வருகிறார் ஒன்றிய செயலாளர் இளையராஜா இதனால் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இளைஞர்கள் மற்றும் இளைஞர் அணியினர் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றன..தமிழ்நாடு முதலமைச்சா்மு.க.ஸ்டாலின் லட்சியமான 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் இளைஞர் அணியினா் 65 நாட்கள் கண் தூங்காமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் : இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா பேசினாா்.

