கொடைக்கானல் ஜன,23
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.


இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில பொருளாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலச் செயலாளர் கோடை வி.ஆனந்த் தலைமையில் ,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம், ஒன்றியம், சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு
வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஆர். வசீகரன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜி. முருகேசன். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவி வி. யுக்னேஸ்வரி திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம். சுசீலா மேரி, மற்றும் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள்,
திரளானோர் கலந்து கொண்டனர்.

