நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை தேசபக்தி நாளாக அறிவிக்க வேண்டும் : நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கோரிக்கை…
சென்னை, ஜன, 24


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130-வது பிறந்தநாளான நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது அதன்படி சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உள்ள அவரது சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை தேசபக்தி நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஐஜேகே துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஆனந்த முருகன், ஊடகப் பிரிவு செயலாளர் நித்யானந்தம் இளைய வேந்தர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளரும், சமூக ஆர்வலருமான புஷ்பராணி, மாநில அமைப்பு செயலாளர் பள்ளிக்கரணை சந்திரசேகர், மாநில நிர்வாகி ஷோபா, சத்யா சரவணா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

