மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே இன்று (ஜன.20) காலை 37 வது சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா தலைமையில் சாலை விதிகளை பின்பற்றி வரக்கூடிய வான ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில் எழுதுகோல், இனிப்புகள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு உரையாற்றினார். உடன் போக்குவரத்து உதவி ஆணையர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர்.மதுரை.

