தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் மகிழ்ச்சி!!!
தூத்துக்குடி, ஜன, 14





தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தின் முன்பு ஆண்டுதோறும் சமத்துவ பொங்கலிட்டு செய்தியாளர்களுக்கு பிரஸ் கிளப் சார்பில் பொங்கல் தொகுப்புகள் வழங்கும் வழக்கம் அதுபோல் இன்று பிரஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.பிரஸ் கிளப் வாசலில் வண்ணக் கோலமிட்டு பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டு வழிபாடு செய்து கொண்டாடினர் .பின்னர் பிரஸ் கிளப் உறுப்பினா்கள் அனைவருக்கும் தலைவா் சண்முகசுந்தரம், தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளா் ராஜு, இணைச்செயலாளர் சதீஷ்குமாா், துணைத்தலைவா் சிதம்பரம், மன்ற கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன், காலை தீபம் ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலையில் கௌரவ ஆலோசகா் அருண் மன்ற உறுப்பினர்களுக்கு பொங்கல் இடுவதற்கு ஏதுவாக எவா்சில்வா் பொங்கல் பாணை கரண்டி மூடி 14 வகையான காய்கறி தொகுப்புகள், வேஷ்டி சட்டை, பொங்கல், கரும்பு பொருட்கள், அச்சு வெல்லம் பச்சரிசி, நெய், ஏலக்காய் என 32 வகையான பொங்கல் தொகுப்புகள் அடங்கிய பொருட்கள் அனைத்து உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் ஓருவருக்கொருவா் கைகுலுக்கி மகிழ்ச்சியை தொிவித்துக்கொண்டனா். இந்த விழாவில் செயற்குழு உறுப்பினா்கள் லட்சுமணன்,கண்ணன், மாாிராஜா, இருதயராஜ், செந்தில்முருகன், ராஜன், முத்துராமன், சட்ட ஆலோசகா் சரவணன், சுவாமிநாதன், உறுப்பினா்கள் ஜாய்சன், கற்பகநாதன், பாலகுமாா், மாாிமுத்து, ரமேஷ், மணிகண்டன், அகமது ஜான், ரவிசந்திரன், அறிவழகன், முத்துக்குமாா், சட்டம் ஒழுங்கு சேகர், தராசு மகாராஜன், உள்பட அனைத்து உறுப்பினா்களுக்கும் தொகுப்புகள் வழங்கப்பட்டது.தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பொங்கல் விழா வெகு சிறப்பாகவும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.
