தூத்துக்குடி, ஜன, 13
தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவாழாவான பொங்கல் திருவிழாவை சமத்துவ பொங்கலாகவும் திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பகுதிகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்தையும் அன்புடன் பழகி கொண்டாடும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய திமுக ஊராட்சி பகுதியில் உள்ள
திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் சிறப்பு நலத்திட்ட உதவிகளான வேட்டி சேலை பொங்கல் கரும்பு உள்ளிட்ட பொருள்களை ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய புதியம்புத்தூா் அலுவலகத்தில் வைத்து வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் 2021ல் முதலமைச்சராக தளபதியாா் பொறுப்பேற்றதும் கொரோனா 2ம் அலை இருந்த நேரம் ஆக்ஜிசன் தட்டுபாடு மருத்துவமனையில் இடம் பிரச்சனை இப்படி பல்வேறு வகையில் இருந்த காலத்தில் அந்த கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை நோில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சா் ஸ்டாலின் அப்போது பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ரேசன் கடைகளுக்கு ரூ 4 ஆயிரம் வழங்கினாா். பால்விலை 3 ரூ குறைக்கப்பட்டது. மகளிா் உாிமைத்தொகை இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சி நமக்கு முக்கியம் என்பதை கருத்தில் மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி உள்ளார் . தற்போது பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஆட்சியில் எல்லாத்துறைகளிலுமே தமிழகம் வளர்ச்சி யடைந்துள்ளது. இதை பாஜக அரசு பாராட்டியுள்ளது. குறைசொல்வதற்கு எதுவும் இல்லை 2011 முதல் 21 வரை 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் புதிதாக எந்த பணியும் நடைபெறவில்லை.

தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரமும் உயரவேண்டும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும். என்று பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஜாதிமதம் பாா்க்காமல் தமிழ்நாட்டில் அனைவரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா் இந்த ஓற்றுமையுடன் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 200 தொகுதிகளை நாம் கைப்பற்ற வேண்டும் அதற்கான பணிகளை நாம் இப்போது துவங்குவோம் என்றும் பேசினார்.
திமுக அரசுக்கு எல்லோரும் ஆதரவு கொடுத்து மீண்டும் தளபதியாரை அாியனையில் அமர செய்ய உறுதி செய்ய வேண்டும். சூாிய ஓளியின் மூலம் வௌிச்சம் கிடைப்பதை போல் எல்லோருடைய வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டும் சமத்துவம் மலரட்டும் தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் எல்லோருக்கும் நல்ல வழி பிறக்கட்டும் என்று ஒன்றிய செயலாளர் இளையராஜா கூறினாா். ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களையும் செயல் செயல்பாடுகளையும் அனைத்து பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கும் எடுத்துச் செல்லும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா பொங்கல் திருவிழா முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வரும் நலத்திட்டத்தினால் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் காணப்பட்டனர்.

