தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,ஜன, 11


தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் ஆண்டுதோறும் டைரி, காலண்டர் வழங்குவது வழக்கம் அதன்படி 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர், பேனா, மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம்,, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும். தொடர்ந்து உறுப்பினர்களின் நலன் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன், உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவருக்கும் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர், வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து போல் பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை சந்தித்து பிரஸ் கிளப் சார்பில் காலண்டர் டைரி ஆகியவற்றை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், மற்றும் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து கணேஷ்நகாில் உள்ள முகாம் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, உறுப்பினா் மாாிமுத்து ஆகியோர் வழங்கினார்கள். தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமாா், அரசு வழக்கறிஞர் பூங்குமாா், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்,, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கும், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தூத்துக்குடி பிளஸ் கிளப் காலண்டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது.

