தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பான 1கிலோ பச்சரிசி , 1கிலோ சீனி, ஒரு முழு கரும்பு, வேஷ்டி,சேலையுடன் ரூ.3000 ரொக்கம் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கி வரும் நிலையில் மதுரை அருகே நாகமலை புதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று (ஜன.8) தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பரிசு தொகுப்பை கூறி வழங்கினார். உடன் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
சு.இரத்தினவேல்.
நிருபர். மதுரை.

