ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி,ஜன,8
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுைற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தருவைகுளம் ரேஷன் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ 3000 ரொக்கம் மற்றும் வேட்டி வேஷ்டி சேலை ஆகியவற்றை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

