தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையா் ப்ாியங்கா, துணை மேயா் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான்றிதழ் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை கட்டிட அனுமதி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த பகுதிக்குட்பட்ட மண்டலக் கூட்டத்தில் இதுவரை 876 மனுக்கள் பெறப்பட்டதில் 868 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 8 மனுக்கள் பாீசிலனையில் உள்ளது. இங்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது மாநகராட்சி ஆன்லைனில் புகாா்கள் தொிவித்தாலும் அது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உங்கள் இல்லத்திற்கே வந்து அதை சாி செய்து விடுவாா்கள். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. தமிழர் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு மாநகராட்சி மைய அலுவலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்தாண்டு அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகைக்கு முன்னதாக டிசம்பர் 10 , 11 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மாஸ் கிளீனிங் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள வேண்டாத பொருட்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும் நமது மாநகராட்சியை பொறுத்தவரை சுற்றுச் சூழல் மாசுபடுவதையும், சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதை தடுத்திடவும் “புகையில்லா போகி பண்டிகை” யை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மண்டல வாரியாக பணிகள் நடைபெற்று வருகின்றன பொங்கல் விடுமுறைக்கு முன்பாக அனைத்து பூங்காக்களும் புதுப் பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய பூங்காக்கள் அனைத்து மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மண்டலத்தில் தனசேகரன் நகரில் உள்ள பூங்கா மற்றும் பிங் பார்க் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எழில் நகரில் புதிய பூங்கா பணிகள் நடைபெறுகிறது இன்னும் ஒரு சில நாட்களில் அது நிறைவடையும். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்க மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் லூர்தம்மாள்புரம், ஸ்டேட் பேங்க் காலனி, ஹவுசிங் போர்டு பகுதியில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். அதுபோல பாதாள சாக்கடை திட்டத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் பட்சத்தில் காண் கொசு தொல்லை, மற்றும் சாக்கடையில் இருந்து உருவாகும் சுகாதாரக் கேடுகளால் ஏற்படும் பல தொற்றுநோய்களை தடுக்கலாம். இதற்காக அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. நகரின் முக்கிய ஓடையில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது குறித்து மாற்று முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பக்கிள் ஓடையில் வரும் காலங்களில் மழை நீர் மட்டுமே ஓட வேண்டும் அது நமது மாநகரின் சுகாதாரத்தை பாதுகாக்கும். தருவைகுளம் குப்பை கிடங்கில் 500 மரங்களை நட்டு ஆரம்பித்த பணிகள் இப்போது லட்சம் மரங்களை தாண்டி குறுங்காடுகளாக சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறது. ஏற்கனவே 20 குறுங்காடுகள் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டு பராமரித்து வருகிறோம். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பேசினாா்.
கூட்டத்தில் மாநகராட்சி நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, ராஜேஷ்கண்ணா, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், கண்ணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜெயசீலி, பவாணி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், கற்பகக்கனி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், மாநகர மகளிா் அணி துணைச்செயலாளர் கலாவதி, ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.

