சென்னை, ஜன, 6
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுைற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி எம்பி பிறந்த தினத்தன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும்
தங்க மோதிரம் அணிவித்து ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


