மதுரை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் உள்ள மயான காளியம்மன் கோவிலில் மார்கழி மாதம் பெளர்ணமி தினத்தன்று கோவில் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு மகா காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதலான குழந்தை வரம். திருமண தடை. குடும்ப கஷ்டங்கள். தொழில் அபிவிருத்தி வேண்டுதலை கேட்டு பூசாரி கண்ணையா மயானம் சென்று திரும்பியவுடன் அருள்வாக்கு வழங்கினார் . இக்கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மயான காளியம்மனுக்கு அன்னதான நிகழ்விற்கு பொருளுதவி செய்தனர். 500க்கு மேற்ப்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விபூதி குங்குமம் வழங்கப்பட்டது.

சு. இரத்தின வேல்.
நிருபர். மதுரை.

