விளாத்திகுளம் உட்கோட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி, விளாத்திகுளம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
இந்த கொடி அணிவகுப்பு வேம்பார், குளத்தூர், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் எட்டயாபுரம் காவல் ஆய்வாளர் திரு.முகமது அலி ஜின்னா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீரல்பானு, சூரங்குடி காவல் நிலைய உதவிஆய்வாளர்கள் திரு.பாண்டியராஜன், திரு.குருசாமி, குளத்தூர் காவல் நிலைய உதவிஆய்வாளர் திரு.கங்கைநாதபாண்டியன், தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சரவணன், எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு.நந்த்வீர் ஆஜாத், எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் திரு.அருள் பிரகாஷ், திரு.தர்மராஜ் உட்பட எல்லை பாதுகாப்பு படையினர் 50 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மற்றும் உள்ளூர் போலீசார் என 120 பேர் கலந்து கொண்டனர்.

