மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6 ம் அணி இணைந்து நடத்தும் இரு சக்கர வாகன விழிப்புணர் பேரணி இன்று (டிச.30)காலை ஆயுதப்படை மைதானத்திலிருந்து புறப்பட்டது.
இப்பேரணியில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 150 காவலர்கள் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். இதனை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வனிதா தொடங்கி வைத்தார். உடன் 6ம் படையின் தளவாய் ஆனந்தன், உதவி தளவாய்கள் சந்தர ஜெயராஜ்,மான்சிங், போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன், ஆய்வாளர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் ஆகியோர் உடனிருந்தனர்.

சு.இரத்தினவேல்.
நிருபர். மதுரை.
