• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி.

policeseithitv by policeseithitv
December 27, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்ன் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் திமுக பிரமுகர் பி.டி.செல்வக்குமார் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் முறையாக அறிவித்து அதை முறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அனைவரையும் அரவணைத்துச் சென்று ஆட்சி செய்வதின் மூலம் பொதுமக்களும் நன்மை அடைந்துள்ளனர். 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். தவெக தலைவர் விஜய் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு தாய், தந்தையர்களை ஓரம் கட்டி வருகிறார். கூடவே இருந்த ஜெயசீலன் உட்பட பலரும் இவருடன் தற்போது இல்லை.
தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை. ஏளனமாக பார்க்கின்றார்கள். அங்கு இருக்கும் சில மாபியா கும்பலால் கட்சி பின்னோக்கி செல்கிறது. புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள்.
விஜய்க்கு பால் அபிஷேகம் அவருக்காக உழைத்தவர்கள் யாருக்கும் தற்போது மரியாதை இல்லை. தூத்துக்குடியில் உள்ள அஜிதா ஆக்னல் என்ற பெண் அவர் முன்னே செல்லும் போது அந்த பெண்ணை விஜய் பார்க்கவில்லை. ஒரு 3 நிமிடம் அவருக்காக ஒதுக்கி அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அந்த நேரத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர் தான் புஸ்ஸி ஆனந்த். தற்போது தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் அஜிதா ஆக்னல்.
தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் இருக்கின்றார்கள். விஜயை சுற்றி இருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியம். விஜய் கண்ணும் கருத்துமாக இல்லை. ஒரு பெண் அவர் முன்னே சென்று பார்க்க வேண்டும் என்று சொல்லும் போது அவரை பார்க்காமல் விஜய் போனால் அவர் யாரைத்தான் பார்ப்பார்.
தீய சக்தி என்று திமுகவை கூறும் விஜய், உண்மையான தீய சக்தி யார் என்றால் விஜய் தான். இவர் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார். 200 கோடி சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்கின்றாரே, நூறு கோடி ரூபாயை இதற்கு முன்னதாக பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறாரா?
நான் விஜய்யுடன் பயணிக்கும் போது சென்னை- கன்னியாகுமரி வரை ஆறுகளை சுத்தப்படுத்தக் கூறியிருந்தேன். 15 கோடி ரூபாய் தான் மதிப்பு ஆனால் அதனை அவர் செய்யவில்லை.
விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? அதனை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும்.
தற்போது வரை பூத் கமிட்டி வலுப்படுத்தவில்லை. ஜனநாயகன் படம், பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அங்கு சென்று விட்டார்கள். எஸ்.ஐ.ஆர்.யில் விடுபட்ட வாக்காளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதை செய்வதற்கு கூட ஆள் இங்கு இல்லை. இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர்.
நடிகை சினேகா, நமீதா போன்றவர்கள் எங்கு வந்தாலும் கூட்டம் வரும். இதற்கு முன்னதாக சில்க் ஸ்மிதா வரும் போது கூட்டம் வர தான் செய்தது. நடிகர்கள் வந்தால் திமுக பாஜக என அனைவருடைய குடும்பமும் வந்து பார்க்கத்தான் செய்வார்கள் இது இயல்பு தான்.
இந்த கூட்டத்தை பார்த்து விஜய் முதலமைச்சராகி விடலாம் என்ற மாயத்தில் இருக்கின்றார். ஆனால் திமுக நல்ல திட்டங்களை அக்கறையோடு செய்து கொண்டு வருகிறது. ஆனால் விஜய் கட்சியில் வசூல் வேட்டை தான் நடைபெறுகிறது. தற்போது 20 மாவட்ட செயலாளர்கள் என்னிடம் பேசிக் கொண்டு இருகிறார்கள். பொங்கலுக்குப் பின் அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு ஆகஸ்ட் ஜூலை மாதத்திற்கு பின்பு அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்வார். ஜனநாயகன் படம் வெளியீடும் போது இவரது ரசிகர்கள் ரூ.3000, ரூ.2000 என்று கொடுத்து டிக்கெட் வாங்குவதை ரசிகர்களிடம் பிளாக் டிக்கெட் விற்கக் கூடாது என்று அவர் தைரியமாக அறிக்கை விடுவாரா? கரூர் சம்பவத்தில் 41 பேர் பழியானார்கள் அதில் 39 பேர் பொதுமக்கள் தான். 3 மணிக்கு வருவதாக கூறிவிட்டு 7 மணிக்கு வந்தது, திட்டமிட்ட சதி. இதற்கு முழு பொறுப்பும் அவர் தான். 30 ஆண்டு காலம் அவரோடு இருந்து உழைத்து அவரது வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் நானும் ஒருவன். இதுபோன்று தான் பலருடைய நிலைமை உள்ளது. அவர் கட்சியில் கட்டமைப்பு முழுமையாக இல்லை. நேர்மையும் இல்லை. எப்படி அவர் சமுதாயத்தை தொலைநோக்கு பார்வையோடு பார்த்து செயல்பட முடியும். கூண்டுகிளியாக இருந்து கொண்டு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டு வருகிறார். மக்களுக்கு அவர் யார் என்று தெரியும். அது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும். விஜய் ஒரு கிளாமர். அவரை பார்த்து விட்டு சென்று விடுவார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள், என்று பேட்டியின் போது கூறினார்.
நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன் வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் 48 பேருக்கு பி.டி.செல்வக்குமார் ஆட்டுக்குட்டி வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In