தூத்துக்குடி.
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கி எதிர்வரும் காலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். உங்களுக்காக எப்போதும் நாடும் நாட்டு மக்களும் முக்கியம் என்று கருதி பணியாற்றி வரும் முதலமைச்சர் தளபதியாரின் வழியில், துணை முதலமைச்சராக பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த ஆட்டுக்குட்டிகளும் அரசி பைகளும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. எப்போதும் மக்கள் நலன் முக்கியம் என்று பணியாற்றும் திமுகவிற்கு உங்கள் ஆதரவு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன் வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

