மாநில அளவிலான தடகளப் போட்டி காரைக்குடியில் நடைபெற்றது..
இந்த தடகளப் போட்டியில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார் கலந்துகொண்டு உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தொடர் ஓட்டம் என்று மூன்று பிரிவுகளில் வெற்றி அடைந்து மூன்று பதக்கங்கள் பெற்றார். செந்தில்குமாரை காவல் துணை ஆணையர் வனிதா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

சு. இரத்தினவேல்
நிருபர். மதுரை.

