தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மாநகராட்சி பகுதியில் கடந்த 18 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த தெற்கு மண்டலத்தில் இதுரை 685 மனுக்கள் வழங்கப்பட்டு 665 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் முறைப்படுத்தி தீர்வு காணப்படும். இந்தபகுதி ஊராட்;சி பகுதியில் இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலமாக எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அதிக நிதி ஒதுக்கீடு செய்ததின் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன் 4 அடி, 5 அடி உள்ள சிறிய சாலைகள் கூட போடப்பட்டுள்ளது. மழைநீர் எங்கும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை. இனிவரும் காலங்களிலும் கனமழைபெய்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டுள்ளது. 22, 23, 24 ஆண்டுகளில் உள்ள மழையை எதிர்கொண்டு 2025 கடக்கும் நிலையில் இருக்கிறோம். வருங்காலத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்காது. குடிநீர் இணைப்பு 5 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் உள்ளது. அதற்கு காரணம் இந்த பகுதியில் அதிகளவு கனரக வாகனங்கள் செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் பல சமயங்களில் மின்கம்பங்களை சேதப்படுத்தி விட்டு கடந்து செல்கின்றனர். அதன் மூலம் 15 மின் விளக்கு கம்பங்கள் இல்லாமல் உள்ளது. அரசு சொத்தை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;. எரியாத மின்விளக்குகள் படிப்படியாக விரைவில் சரி செய்யப்படும். இந்த பகுதியில் நான்கு இடங்களில் முக்கியமான இடத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. 15 வார்டுகள் அடங்கிய தெற்கு மண்டலத்தில் சாலைகள் போடப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகள் எதுவும் இருந்தாலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்குவதன் மூலம் முறைப்படுத்தி போடப்படும். இத்தனை குறுகிய ஆண்டுகளுக்குள் அனைத்து பணிகளையும் நல்லமுறையில் எங்களோடு இணைந்து சிறப்பாக செய்த அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் குறிப்பாக பொதுமக்களுக்கும், தவறுகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பகுதிகளும் பாரபட்சமின்றி பணிகளை செய்து வருகிறோம். கடந்த மழை காலத்தில் கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாத்து ஓடை 12 கி.மீ தூரம் முறைப்படுத்தியதால் கடலுக்கு தேவையற்ற நீர் சென்றது. அதன்மூலம் தேவையற்ற பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

கூட்டத்தில், இணை ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி நகர அமைப்பு திட்ட பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர்கள் செல்வம், லெனின், துணை பொறியாளர்கள் துர்காதேவி, பாக்கியலட்சுமி, சுகாதாரம் நிர்வாகதுறை அலுவலர்கள் சிவபிரிதா, கௌரி, அழகுலட்சுமி, விக்னேஷ்வரன், சரவணக்குமார், மாரி சத்யா, சிவராம், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், குழாய் ஆய்வாளர் பேட்ரிக், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், ராஜேந்திரன், ராஜதுரை, பகுதி செயலாளர் ஆஸ்கர், வட்ட செயலாளர் பிரசாந்த், கருப்பசாமி, மைக்கேல் ராஜ், வசந்தி பால்பாண்டி, பகுதி பொருளாளர் முத்துராஜா, பகுதி இளைஞரணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொழிலாளரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், துணைச் செயலாளர் தங்கசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

